வியாழன், 15 நவம்பர், 2012

கவிதைகள்

$$$ பனித்துளிகள் $$$ 
****************** 
இரவுப் புழுக்கத்தில் 
நிலவுச்சிற்பத்தை
 நட்சத்திர உளிகளால் 
செதுக்கிசெதுக்கி 
களைத்துப்போய் 
வழித்து வீசிய 
வியர்வைத்துளிகள்.
 ******************* 
கி.சார்லஸ்

ஹைக்கூ கவிதைகள்

வானப்பெண்ணின் 
நகரும் தேமல்கள்
மேகங்
கள்
*************************
 
கண்களை மூடாமல்
 தியானிக்கின்றேன்.. 
அறைக்குள் மழையிருட்டு.
*************************

 மின்சாரமற்ற இரவு 
வெளியில் வந்தேன்.
 ...இன்று பவுணர்மி.
**********************

ஹைக்கூ கவிதைகள்

புகழ்பெற்ற ஆலயங்கள் 
எப்பொழுதும் பார்க்கின்றேன்.
அதே பிச்சைக்காரர்களை.
*****************************

மழைக்கால முழுநிலா
 அடிபட்டுக்கிடக்கிறது..
சா
லை கடந்த ஆமை.
*********************

எப்படி எழுதினாலும்
 அழகாகி விடுகின்றன.
குழந்தைகளுக்கான கவிதைகள்.
*******************************

 கி.சார்லஸ்

haiku

குழந்தைகளின் தினம் 
ஞாபகத்தில் சுடுகிறார்கள்.. 
கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள்.
**********************************

 கி.சார்லஸ்

tamil haiku kavithai

சிறைக்கம்பியில்
ஓய்வெடுக்கிற
து. 
வண்ணத்துப்பூச்சி.
*********************

 கி.சார்லஸ்

தீபாவளி ஹைக்கூ

தீபாவளியானது
 "தீபவலி"ஆனது.
நெருப்பு சுட்ட குழந்தைக்கு.
***************************
பாக்கு உரலில்
 முறுக்கு இடிக்கிறாள்.
பற்கள்
இழந்த பாட்டி.
***********************

தொடரும் வெடிசப்தம் 
மிரண்டு ஓடும் ஆடுகள்.
திட்டி தீர்க்கும் பாட்டி

.***********************
கி.சார்லஸ்
 

புதன், 14 நவம்பர், 2012

தமிழ் ஹைக்கூ

******************** 
கணநேரம்
 குழந்தையாக்குகிறது
 அமரும் தட்டான்.
*
**********************
கி.சார்லஸ்