வெள்ளி, 30 ஜூலை, 2010

:ஹைக்கூ கவிதைகள்:

வசந்தகால நிலா
ரசிக்க முடியவில்லை.
புலம் பெயர்ந்த நாடு.
* * *
இலையுதிர்கால முழுநிலா
பாம்புகளாய் பயமுறுத்தும்
அசையும் மரக்கிளைகள்.
* * *
கணநேரம்
குழந்தையாக்குகிறது.
அமரும் தட்டான்பூச்சி

: குறுஞ்செய்தி கவிஞர்களின் சந்திப்பு விழா :

ஜெயம் குறுஞ்செய்தி இதழின் கவிஞர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.
நாள்: 1.8.2010
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அந்தியூர்.
: நிகழ்ச்சி நிரல் :
காலை -9.30 வரவேற்பு
காலை-9.45 கவிஞர்கள் அறிமுகமும்,கவிச்சரமும்.
காலை-11 மணிக்கு கவிஞர் பா.ஜெயக்குமாரின் -செவ்வானமும் சிறு தூறல்களும்'நூல் வெளியீடு.
மதியம்-1 மணிக்கு விருந்து
மதியம்-2 மணிக்கு கலந்துரையாடல்
அனைவரும் வருக,
கவிச்சுவை பருக.
முகவரி:
கவிஞர்.பா.ஜெயக்குமார்
ஆலய நகர்,எண்ணமங்கலம்(அஞ்சல்)
அந்தியூர்-638501
ஈரோடு மாவட்டம்
அலைபேசி:
9842639779
9842163703

: அறிமுகம் : குறுஞ்செய்தி கவிதை இதழ்-1

.இதழ் அறிமுகம்.
*:வாலிதாசன்:*
தினமும் அலைபேசி வழியாக கவிஞர்கள்,வாசகர்கள்,விமர்சகர்கள் என 757 நபர்களுக்கு ஹைக்கூ கவிதைகள் அனுப்பிவருகிறார், முகவையிலிருந்து கவிஞர் வாலிதாசன்.
14.4.09 ஆண்டு துவங்கி இன்றுவரை 380 இதழ் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.முதன் முதலாக தன் குறுஞ்செய்தி இதழுக்கென வலைப்பூவை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும்.
இவரது வலைப்பூ முகவரி:
www.karumuttai.blogspot.com
முற்றிலும் மாறுபட்ட கவிதைளாக வரவேற்கிறார்.
நீங்களும் இதழுக்கு ஹைக்கூ கவிதைகள் அனுப்ப வேண்டிய அலைபேசி எண்:
+919894887705

ஞாயிறு, 25 ஜூலை, 2010

தாயிருந்தும்
அனாதையாகிறது
தாலாட்டு.

ஹைக்கூ

பெரிய வீடு
உள்ளே நுழைந்தேன்.
சின்ன மனசு

ஹைக்கூ

கழித்த சிறுநீர்
முழுவதும் கரைய
மண்ணுக்குள் நிலா

ஹைக்கூ

அவசரமாய் போகவேண்டும்
நிற்க வைக்கிறது
பிடித்த பாடல்

புதன், 21 ஜூலை, 2010

ஹைக்கூ

அப்பாவின் கல்லறையை
சுத்தப்படுத்த வேண்டாம்
பூச்செடி

செவ்வாய், 20 ஜூலை, 2010

முரண்

புதுமெத்தையில்
உறக்கமேயில்லை
தரையில் அம்மா