வியாழன், 15 நவம்பர், 2012

தீபாவளி ஹைக்கூ

தீபாவளியானது
 "தீபவலி"ஆனது.
நெருப்பு சுட்ட குழந்தைக்கு.
***************************
பாக்கு உரலில்
 முறுக்கு இடிக்கிறாள்.
பற்கள்
இழந்த பாட்டி.
***********************

தொடரும் வெடிசப்தம் 
மிரண்டு ஓடும் ஆடுகள்.
திட்டி தீர்க்கும் பாட்டி

.***********************
கி.சார்லஸ்
 

புதன், 14 நவம்பர், 2012

தமிழ் ஹைக்கூ

******************** 
கணநேரம்
 குழந்தையாக்குகிறது
 அமரும் தட்டான்.
*
**********************
கி.சார்லஸ்

ஞாயிறு, 11 நவம்பர், 2012

தமிழ் ஹைக்கூ

கனவுப் பறவைகளின்
வாடகைக் கூடுகள்.
கண்கள்.

கி.சார்லஸ்

சனி, 10 நவம்பர், 2012

ஹைக்கூ

முறிக்கப்பட்டுள்ளன
சந்தோசத்தின் சிறகுகள்
ஊருக்குப் போயிருக்கும் குழந்தை
.*******************************
கி.சார்லஸ்

ஹைக்கூ

குருவிகளின்
பிரம்மாண்டமான சமாதிகள்.
கைப்பேசி கோபுரங்கள்
*************************
கி.சார்லஸ்

வெள்ளி, 9 நவம்பர், 2012

tamil haiku kavithai

******************
 பரணியிலிருந்து
இறங்கி வந்தது...
 
ரிக்கேன் விளக்கு.
**
*****************
கி.சார்லஸ்

சனி, 31 மார்ச், 2012