வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

: கல்லறை ஹைக்கூ :

கல்லறையின் மீது
புணர்ந்தபடி அமர்கின்றன.
பட்டாம்பூச்சிகள்.
* * *
கல்லறையின்
பின்புறம்
குளவிக்கூடு.
* * *
வழக்கமாக
மண்டியிடும் இடத்தில்
புதிய கல்லறை.
* * *
கல்லறை திருநாள்
வெறுமையாய் கிடக்கிறது.
பக்கத்து கல்லறை.
* * *
கல்லறை மேடையில்
ஊதுவர்த்தி செரும்பொழுது
எறும்பு புற்று.
* * *
கி.சார்லஸ்

4 கருத்துகள்:

  1. நன்றாக உள்ளன! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கருத்தாளமிக்க கவிதைகள்
    ஹைக்கூவாய் மின்னலிடுகின்றன.
    ரசிக்கக்கூடிய கவிதைகளாகவும் இருக்கின்றன.
    அருமை

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் தோழர் . மிக அருமையான சிந்தனைகள்.

    ( பாலோயர்ஸ் லிஸ்ட் ஏன் சேர்க்கவில்லை . அதனை இணைக்க ஏற்பாடு செய்யுங்கள் )

    பதிலளிநீக்கு